கோவையில் 1டன் குட்கா பறிமுதல். 5 பேர் கைது.

கோவை வெரட்டி ஹால் ரோடு போலீசார் நேற்று காந்தி பார்க் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேக படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 1 டன் புகையிலைஇருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இதை கடத்தி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஜிதேந்திரகிரி ( வயது 32 )ரவிக்குமார் (வயது 24)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜி தேந்திர கிரியின் சகோதரர் அரவிந்கிரி தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள். இதேபோல ரேஸ்கோர்ஸ் போலீசார் லட்சுமி மில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார் கள். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை (குட் கா) விற்பனைக்கு வைத்திருந்ததாக கோவையை சேர்ந்த அய்யப்பன் ( வயது 48) ஜெயமுருகன் ( வயது 54) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார்அங்குள்ள கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர். அப்போது புகையிலை மற்றும் போதை பாக்குகள் விற்பனை செய்ததாக நெ. 4 வீரபாண்டி காமராஜ் நகரை சேர்ந்த ஜெயக்குமார்   (வயது 43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிலோ குட்கா மற்றும் போதை பாக்குகள் பறிமுதல்செய்யப்பட்டன. இவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.