கோவை ரயிலில்12 கிலோ உயர் ரக கஞ்சா சிக்கியது

கோவை ஜூலை 3 கோவை ரயில் நிலையத்துக்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது .அந்த ரயிலில் பொது பெட்டியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சப் இன்ஸ்பெக்டர் மதன்ராஜ் தலைமையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது இருக்கையின் அடியில் இருந்த ஒரு சாக்கு பையை போலீசார் திறந்து பார்த்தனர் .அதில் பொட்டலம், பொட்டலமாக கஞ்சா இருந்தது. உடனே போலீசார் அதிலிருந்து 12 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர் .அந்த கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.