டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் 132 மதுபாட்டில் பறிமுதல் .

பார் ஊழியர் கைது.கோவை ஆகஸ்ட் 21 கோவை காந்திபுரம், லஜபதிராய் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 1569) அருகே ஒரு பெட்டி கடையில் மது பாட்டில் களை பதுக்கி வைத்து 24 மணி நேரம் விற்பனை செய்வதாக மது விலக்கு அமல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு அந்தப் பெட்டி கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 132 மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன மது விற்ற பணம் ரூ 6080 கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியரான ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை சேர்ந்த காளீஸ்வரன் (வயது 35)கைது செய்யப்பட்டார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.