16 வயது சிறுவன் சிறப்பு இல்லத்தில் அடைப்பு.!!

கோவை மாவட்டம் நெகமம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மரம் அறுவை நிலையம் உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.25 ஆயிரத்தை 16 வயது சிறுவன் ஒருவன் திருடிவிட்டான். இதுகுறித்து மர அறுவை நிலைய உரிமையாளர் நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அந்த சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை கோவை இளஞ்சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த முதன்மை நடுவர் அருண்குமார், உறுப்பினர்கள் அந்த சிறுவனை மறுவாழ்வுக்காக 3 ஆண்டுகள் செங்கல்பட்டில் உள்ள சிறப்பு இல்லத்தில் அடைக்க உத்தரவிட்டனர்..