2 டன் போதை பொருட்கள் தீ வைத்து அழிப்பு.!!

கோவை மேற்கு மண்டல காவல்துறையில் கோவை .சேலம் ஆகிய 2 சரகங்கள் உள்ளன..இந்த பகுதியில் ஐ.ஜி. செந்தில் குமார் தலைமையில் கோவை சரக டி.ஜ.ஜி சசி மோகன் மேற்பார்வையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை உட்பட 4 மாவட்டங்களில் 1,317 வழக்குகளில் 2 ஆயிரத்து 191 கிலோ கஞ்சா மட்டும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அழிக்க கோர்ட்டில் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு கோர்ட் அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து டி.ஜ.ஜி யும்,போதை பொருள் அழிப்புக்குழு தலைவருமான சசி மோகன் தலைமையில் போதை பொருட்கள் அனைத்தும் கோவை அருகே உள்ள செட்டிபாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்குள்ள அரசு அனுமதி பெற்ற தனியார் நிறுவனத்தில் 2 டன் 191 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.. இந்த போதை பொருள் மூலம் சுற்றுச்சூழல் எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு நவீன முறையில் பாதுகாப்பாக முழுமையாக அழிக்கப்பட்டன.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- கோவை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் 3 முறை ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது முறையாக 2 – டன் கஞ்சா மட்டும் போதை பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன. போதை பொருட்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தீமைகளை முற்றிலும் தடுக்கும் வகையில் பறிமுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை தொடர்ந்து நடத்தப்படும். அத்துடன் போதை பொருட்களை கடத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.