சாலை மறியலில் ஈடுபட்ட 21 பேர் கைது.

கோவை ஆகஸ்ட் 9 கோவை சரவணம்பட்டி, சத்தி ரோடு ஆனந்தகுமார் மில் பஸ் ஸ்டாப் அருகே ரோடு வசதி கோரி நேற்று மாலையில் சிலர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ,சப் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கிருஷ்ண பிரசாத், முத்து அபிஷேக், கிருஷ்ணகுமார், உட்பட 21 பேரைகைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.