பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 23 சிறை கைதிகள்

கோவை மே 8 கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் 21 தண்டனை கைதிகள் 2விசாரணை கைதிகள் என மொத்தம் 23 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இவர்களுக்கு சிறை அதிகாரிகளும்,கைதிகளும் பாராட்டு தெரிவித்தனர்.