காரில் கடத்தி வந்த235 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது.

கோவை ஜூலை 10கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்து, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன்முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அவரது நேரடி மேற்பார்வையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்றுகிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சி சாலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையின் போது, டி.என் 06 ஆர். 1959 என்ற எண் கொண்ட “வொல்க்ஸ்வேகன் ” காரில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தசதீஷ்குமார் (36) மற்றும்வேதாரண்யம்,நாகப்பட்டினம் , வேதமணி (வயது 27) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் வந்த காரைசந்தேகத்தின் பேரில் மடக்கி பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.அப்போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ70 லட்சம் மதிப்புள்ள 235 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதை யடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேற்படி குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி, வேறு மாநிலத்திற்குத் கடத்தி செல்வதற்காக வைத்திருந்தனர் என்பதுதெரியவந்தது.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கஞ்சா கடத்தல் பேர்வழிகளைமின்னல் வேகத்தில் கைது செய்த சூலூர் காவல்துறையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன்சூலூர் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்