கோவை புதூர் “கில் யூ ரெசிடென்சியல் ” பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு 15 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பட்டுள்ளது.இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராஇயக்கத்தை தொடங்கி வைத்தார். இது பற்றி மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரம் முழுவதும் தற்போது 25 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் மூலம் கோவை மாநகர பகுதியில் குற்றங்கள் குறைந்துள்ளது. எந்தெந்த இடத்தில் கேமரா உள்ளது? என்பது குற்றவாளிகளுக்கு தெரியாத வகையில் ரகசியமாக பொருத்தப்பட்டுள்ளது. கோவை புதூரில் ஆங்காங்கே நகைப்பறிப்பு சம்பவங்கள் அரங் கேறியது. தற்போது அதனை முற்றிலுமாக கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளனர்.தனிப்படை போலீசரும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இனி குற்ற வாளிகள் தப்ப முடியாது இவ்வாறு அவர் அவர் கூறினார்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0