கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், சிங்கப்பூர், அபுதாபி சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் வெளிநாடுகளில் இருந்து டிரோன்கள் இ-சிகரெட்டுகள் தங்க கட்டிகள் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது .அவ்வாறு கடத்தி வரும் பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி கடந்த 2 மாதத்தில் மட்டும் விமான நிலையத்தில் பல உளவுத்துறை அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 1 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 272 டிரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தகவலை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0







