குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது.

கோவை ஆகஸ்ட் 22 கோவை நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 54) டீ மாஸ்டர். இவரை கடந்த 24 -ஆம் தேதிகத்தியை காட்டி மிரட்டி ஒருவர் ரூ 5,150, மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல்லை சேர்ந்த ஷாருக்கான் ( வயது 22) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து பணம் செல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த மாதம் குறிச்சிபகுதியை சேர்ந்த சையத் அலி என்ற நிஜாமுதீன் ( வயது 34 )என்பவரை போத்தனூர் போலீசார் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்தனர்.இதேபோல கோவையைச் சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேற்கண்ட 3 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீசார் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர் இதன் பேரில்போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்கண்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார் .இந்த உத்தரவு சிறையில் உள்ள 3 பேரிடம் நேற்று வழங்கப்பட்டது. ,