கோவை மே 12 கோவை மாநகர பகுதியில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும் வாகன தணிக்கை தீவிர படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவணன் சுந்தர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி போக்குவரத்து போலீசார் மற்றும் சட்ட ம் -ஒழுங்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் குடிபோதையில் யாரும் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் போக்குவரத்து விதிகளை மதித்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர் .இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து தொகுதிகளை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை குடிபோதையில் வாகனம் ஓட்டிய 3,188 பேர் பிடிபட்டனர்.இவர்களுக்கு ரூ 3 கோடியே 75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ..இது கடந்த ஆண்டை விட 1185 பேர் அதிகமாகும் .அதே போன்று கடந்த 4 மாதத்தில் நடந்த விபத்தில் 91 பேர் பலியாகி உள்ளனர். 296 பேர் காயம் அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட குறைவாகும். இதற்கு குடிபோதையில் வாகனங்கள் ஓட்டி வரும் நபர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தான் முக்கிய காரணம். அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டியது காரில் சீட்பெல்ட் அணியாமல் செல்வதாக 1 லட்சத்து 4 ஆயிரத்து 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது .கடந்த ஆண்டில் 4 மாதத்தில் 58 ஆயிரத்து 113 பேருக்கு தான் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது. சிக்னலில் நிற்காமல் செல்வது குறிப்பிட்ட வேகத்தை விட அதிகமாக ஓட்டுவது போன்ற விதிமுறை மீறலுக்கு 28ஆயிரத்து730 பேருக்கு அபராதம் விதித்துள்ளோம். கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 438 பேருக்கு தான்அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.விபத்து நடப்பதை குறைக்க வாகன தணிக்கையை தீவிரப் படுத்தி உள்ளோம் எனவே வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறாமல் இருக்க வேண்டும்.. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0