கோவை; சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, அக்கா வயலைச் சேர்ந்தவர் ராமநாதன் இவரது மகன் கேசவன் ( வயது 19) இவர் கோவையில் உள்ள சங்கரா கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக சரவணம்பட்டி ரோடு தென்றல் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ளார் அவருடன் அவரது மூத்த அண்ணன் சரவணன், உறவினர்கள் ரஞ்சித் குமார் விஸ்வான், ஆதிஷ் கண்ணன், சாரதி ஆகியோரும் தங்கி உள்ளனர்.இவர்களும் அதே கல்லூரியில் படித்து வருகிறார்கள்.கடந்த 30 ஆம் தேதி கேசவனுக்கும் அதே கல்லூரியில் படித்து வரும் பிரனேஷ் என்ற மாணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதை யடுத்து கேசவனை கல்லூரி நிர்வாகம் தற்காலி கமாக சஸ்பெண்ட் செய்தது. இதனால் கேசவன் மற்றும் அவரது உறவினர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம்கோவைக்கு வந்தனர் இதை அறிந்த பிரனேஷ் 9 உட்பட பேர் சேர்ந்து இவர்கள் தங்கி உள்ள அறைக்குள் புகுந்து கேசவன், சரவணன் ஆதிஷ் கண்ணன், சாரதி ஆகியோரை இரும்புகம்பியாலும், தடியாலும் சரமாரியாக தாக்கினார்கள் இதில் 4பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து கேசவன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரனேஷ் உட்பட 9மாணவர்கள்மீது 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0