கோவை ஆகஸ்ட் 2 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் கோவை ரயில் நிலையத்தில் நேற்று மாலை ரோந்துசுற்றி வந்தனர் .அப்போது அங்குள்ள முதலாவது பிளாட்பாரத்தில் ஒரு சாக்கு மூட்டை கேட்பாராற்று கிடந்தது. உடனே போலீசார் அதை கைப்பற்றி திறந்து பார்த்தனர். அதில் உயர்ரக வகை கஞ்சா 3 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது அதன் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் .போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் ரயில் நிலையத்தில்தீவிர சோதனை செய்வதை அறிந்த மர்ம ஆ சாமிகள் கஞ்சா முட்டையை பிளாட்பாரத்தில் வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார்அந்த மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்..
