போலி பான்கார்டுகள் தயாரிப்பு பெண் உட்பட 6 பேர் கைது..

கோவை மே 9 கரூரில் போலிபான் கார்டுகள் தயாரிப்பதாக கோவையில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கரூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் .அப்போது அங்குள்ள ஒரு அறையில் போலி பான் கார்டுகள் தயாரிக்கும் கும்பலை கண்டறிந்து அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கரூரை சேர்ந்த ஜெயக்குமார் ( 52 ) கார்த்திக் (27) நவீன் சேகர் ( 22 ) சம்பத் (27 )சீனிவாசன் (24)மற்றும் கலைவாணி ( 32 ) ஆகியோர் என்பதும் இந்த 6 பேரும் சேர்ந்து போலி பான் கார்டுகள் தயாரித்து ஆதார் கார்டு எடுக்க பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்து கரூர் போலீசில் ஒப்படைத்தரர். அவர்களிடம் இருந்து 130 போலி பான் கார்டுகளும், 69 சேர்க்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி, 6 செல்போன், போலி பான்கார்டுகள் தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இந்த கும்பல் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரம் பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் பான்கார்டுகள் பெற்றுக் கொடுத்துள்ளனர். அதில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம். ஒரு கார்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை பெற்றுள்ளனர்..இந்த கும்பலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.