வாடகை வீட்டில் 7 பவுன் நகை திருட்டு

கோவை ,ஜூலை 10 கோவை அருகே வெள்ளலூர் பிரசிடெண்ட் காலனியில்உள்ள ஒரு வாடகை வீட்டில் வசிப்பவர் கோபி ( வயது 39 )இவரது மனைவி குடும்பத்துடன் பொள்ளாச்சியில் வசித்து வருகிறார். கோபி வாரம் ஒரு முறை இந்த வீட்டுக்கு வந்து செல்வார். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்தபோது வீட்டின் வைத்திருந்த 7 பவுன்தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கோபி போத்தனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.