அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் 76 – வது குடியரசு தின விழா..

இந்திய திருநாட்டின் 76 – வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையேற்று தேசிய கொடி ஏற்றி வைத்தார். பிரண்ட்ஷிப் திரைப்படப் புகழ் நடிகர். ராபின் பிரபு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார், உதவும் கரங்கள் அறக்கட்டளையின் சமூக ஆர்வலர். கே. ராஜாமணி ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார், மாநில மகளிர் அணி தலைவி. ஐ. கரோலின் விமலா ராணி, கௌரவத் தலைவர். பி.எஸ். ஸ்டீபன், கௌரவ ஆலோசகர்கள் எஸ். கணேசன், எ.லியோ பெர்னாண்டஸ், ப. சத்தீஸ் குமார், ஒய். அமுல் தாஸ், எம்.எம். ஜான், ஏ. இருதயராஜ், எம். முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறியவர்கள் முதல் கொண்டு பெரியவர்கள் வரைக்கும் உண்டான விளையாட்டுப் போட்டிகளை தமிழ் அமுதம் காளிதாஸ் அறப்பணி மையத்தின் தலைவர். நற்குணம் மற்றும் பாவை கதை நூலின் படைப்பாளி தமிழ் அமுதம் அய்யாசாமி அவர்கள் துவக்கி வைத்தார். புலியகுளம் ஊர் சபையின் தலைவர். பா. அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். பெரியார் நகர் பள்ளிவாசல் இமாம் ஹெச். செய்யது அலி உசேன், விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் பிரமுகர் ப. மாணிக்கம், ஆக்னெஸ் நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளர் கல்வி சேவைக்காக சேவை சுடர் விருது பெற்ற எஸ்.சுரேஷ், திமுக அண்ணா கலைஞர் அன்பு படிப்பகம் இரா. தேவராசு, நினைவகத்தின் செயலாளர், புலியகுளம் தே. இளங்கோ, 66 – வது வட்ட திமுக துணைச் செயலாளர் எஸ். விவேக் குமார், இளைஞர் அணியைச் சேர்ந்த எஸ். முகேஷ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர். எம். மில்லர் தாஸ், சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் லயன். பி. அருள் டிசில்வா, ரூபட் ஆரோக்கியராஜ் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் நல மையத்தின் செயற்குழு உறுப்பினர் எஸ். கிறிஸ்டி மோனிஷா நன்றி கூறினார். கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகளிர் அணி நிர்வாகிகள் மெர்சி மகளிர் சுய உதவிக் குழு தலைவி. ஐ. பிரான்சினா, எம். உசைபா, ஆர். கலையரசி, எஸ். இளவரசி, புஸ்பம்மாள், பிலோமினாள், தங்கமணி, ஆகியோர் செய்திருந்தனர். இச்செய்தினை தங்கள் பத்திரிக்கையில் புகைப்படத்துடன் பிரசுரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.