வீட்டில் இருந்த நகை கொஞ்சம் கொஞ்சமாக மாயம்..!

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர், முதல் வீதியைச் சேர்ந்தவர் வேலுசாமி அவரது மனைவி மரகதம் (வயது 56) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அழகுராஜா ( வயது 38) என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். மரகதம் வீட்டில் வைத்திருந்த நகைகள் அடிக்கடி திருட்டு போனது. கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 8 பவுன் நகைகள் திருட்டு போனது. இது குறித்து மரகதம் சுந்தராபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த அழகுராஜா மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகு ராஜாவை தேடி வருகிறார்கள்.