கோவை ரயில் நிலையத்திற்கு நாள்தோறும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து பல்வேறு வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் என ஆயிரம் கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகருக்கு கடந்த சில மாதங்களாகவே வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தி வரப்படுவது அதிகரித்து வருகிறது.
அதனை தடுக்கும் விதமாக ரயில்வே காவல்துறை மற்றும் கோவை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ரயில் பயணிகளை கண்காணித்து கஞ்சா போதை மாத்திரைகள் உள்ளிட்ட அவற்றை பறிமுதல் செய்தும் வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவைக்கு நோக்கி வந்த வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ், ரயிலை கோவை ரயில் நிலையத்தில் நிற்கும் போது சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில், முன்புற பொதுப் பயணிகள் பெட்டியில் ஒருவரும் கேட்பாரற்று கிடந்த வெள்ளை பையில் 9 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, யார் ? அந்த பையை வைத்து இருந்தார்கள், எங்கு ? இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் பின்னணியையும் கண்டறிய மேலும் தீவிர விசாரணை போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.