தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 3 ஆம் கட்ட போராட்டம் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம். திருச்சியில் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் வருவாய்த்துறை பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலம் பணியிடங்களை பாதுகாத்திட கோரிக்கைகளை வென்றிட 3 ஆம் கட்ட போராட்டம் மற்றும் பணி புறக்கணிப்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போ ராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவரும் மேற்கு வட்டாட்சியருமான பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல இரவு பகல் பாராது உழைத்து பணி செய்பவர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து தமிழக அரசு மறுத்து வருகிறது.
வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி திருநெல்வேலி நடை பெற்ற மத்திய செயற்குழு கூட்ட முடிவின்படி மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்து முதல் கட்டமாக பெருந்திரள் முறையீட்டு இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்ட போராட்டமாக சென்ற மாதம் 29 தேதி அன்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தி தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்று வெகு எழுச்சியாக நடைபெற்றது. இவ்விரு போராட்டங்களுக்கும் பிறகும் தங்களின் கோரிக்கை களை நிறைவேற்ற தமிழக அரசு எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்க இல்லாத காரணத்தால் 3 ஆம் கட்ட போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர் இப் போராட்டம் மூலம் மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்றும், கருணை அடைப்பிலான பணி நியமன உச்ச வரம்பினை 5 சதமாக குறைக்கப்பட்டுள்ளது ரத்து செய்து மீண்டும் 25 சதமாக நிர்ணயம் செய்திட வேண்டும் என்றும்,பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இப்போரட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. இப்போராட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0