கோவை அரசு மருத்துவமனை சிக்னல் மூடல். புதிய “யூடேர்ன் தொடக்கம்.

கோவையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்உத்தரவின்பேரில்போக்குவரத்து துணைஆணையர்அசோக் குமார்உதவிஆணையர் சேகர்ஆகியோர் மேற்பார்வையில் பல்வேறு இடங்களில் ” யூ டேர்ன் ” அமைக்கப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருக்கும் நேரம்குறைகிறது. இந்த நிலையில் கோவை திருச்சி ரோட்டில் அரசு மருத்துவமனை -அரசு கலைக் கல்லூரி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் அதிக நேரம் வாகன ஓட்டிகள் காத்திரு க்கும் நிலை ஏற்பட்டு வந்தது .இதையடுத்து அந்த இடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இன்று அந்த சிக்னல் மூடப்பட்டு வாலாங் குளத்திலிருந்து அரசு கலைக் கல்லூரி ரோட்டு க்கு செல்லும் பாதையின் நடுவில் தடுப்பு வேலிகள் வைத்து அடைக்கப்பட்டது.அரசு கலைக் கல்லூரி ரோட்டில் இருந்தும் வரும் வாகனங்கள் பிரசன்டேஷன் “கான் வெண்ட் ” எதிர்புறம் உள்ள ” யூ டேர்ன் ” வழியாக வலது புறம் திரும்ப வேண்டும். அதேபோல வாலாங்குளம் மற்றும் திருச்சி ரோட்டில் கிழக்கு திசையில் இருந்து வருபவர்கள் சி.எஸ்.ஐ. சர்ச் எதிர் புறம் உள்ள யூடேர்ன் வழியாக வலது புறம் திரும்ப வேண்டும். இதனால்அந்த சிக்னலில் போக்கு வரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.