கோவையில் ரூ.10 ஆயிரத்து 740 கோடியில் 2 வழிதடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் விரைவில் தொடக்கம்.

கோவையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாகியும் இந்த திட்டப் பணிகள் கோவையில் தொடங்கப்படவில்லை. ஆனால் கோவை நகரில் அறிவிக்கப்பட்ட ஆண்டில்தான் கேரள மாநிலம் கெர்சசியிலும் அறிவிக்கப்பட்டது. அங்கு தற்போது மெட்ரோ ரெயில் இயங்கி கொண்டு இருக்கிறது. பல்வேறு காரணங்களால் மெட்ரோ ரெயில் திட்டம் கோவையில் செயல்படுத்த தாமதம் ஆனது. மெட்ரோ ரெயில் திட்ட அறிக்கையை திருத்தத்துடன் மாற்றி அனுப்புமாற மத்தி யஅரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் கோவையில் மெட்ரோ ரெயில் திட்ட திருத்த அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளை நீக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மெட்ரோ ரெயில் திட்ட இயககுனர் சித்திக், அனைத்து துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் உள்பட பலர் கலந்த கொண்டனர். பின்னர் மெட்ரோ ரெயில் திட்ட இயக்குனர் எம்.ஏ.சித்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கோவை நகரில் 34.8 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.10 ஆயிரத்து 740 கோடியில் 2 வழித்தடங் களில் 32 நிலையங்களில் கொண்ட மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் ஏற்கனவே சமர்ப்பித் துள்ளோம். மத்திய அரசு கூடுதல் விவரங்கள் கேட்டதை அடுத்து, அந்த விவரங்களும் மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டதிற்கு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். மதுரையிலும் ரூ.16 ஆயிரத்து 340 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை, மதுரையில் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்த திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றவும், அதில் 2 ஆண்டுகள் நிலம் கையகப்படுத்துதல், 1.5 ஆண்டுகளில் திட்டப்பணிகளை நிறைவேற்றுதல் உள்ளிட்டவை நடைபெறும்.
10 ஹெக்டேர் நிலம் வரும் ஜனவரி , பிப்ரவரி மாதங்களில் ஆரம்பக்கட்ட பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் திட்டம் 150 ஆண்டுகள் கட்டமைப்புக்கான திட்டம் என்பதால் 2 வழித்தடங்களில் 10 ஹெக்டேர் நிலம் ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங் களுக்கு கையகப்படுத்தப்படும். நீலாம்பூரில் மெட்ரோ ரெயிலுக்கான தலைமை அலுவல கம் அமைக்கப்பட உள்ளது. அங்கு டெப்போ அமைக்க கூடுதலாக 16 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும். அவினாசி ரோட்டில் மேம்பாலத்தை ஒட்டி இடதுபுறமாக இந்த திட்டம் செய்லபடுத்தப்படும். இந்த சாலையில்கட்டிடங்கள் இருந்தாலும் நீண்டகாலத் துக்கான திட்டம் என்பதால் தேவையான நிலம் கையகப்படுத்தப்படும் . இருந்தாலும் நிலம் கையகப்படுத்துவதை குறைப்பதற்கு மெட்ரோ ரெயில் திட்டத்தின் தூண் சாலையின் ஓரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், அதன் மூலம் திட்டத்திற்கான நிதியை குறைப்பதுடன், நிலம் கையகப்படுத்துதலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைக்க முடியும். ஒரு வழித்தடத்தில் 30 மீட்டருக்கு ஒரு தூண் சராசரியாக அமைக்கப் படும் என்றும், அவினாசி சாலையில் நெடுஞ்சாலைத்துறை பாலம் நீலாம்பூர்வரை நீட்டிக் கப்பட உள்ளதால், 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான மெட்ரோ ரெயில் திட்டம் அந்த பகுதியில் ஒருங்கிணைந்த திட்டமாக செயல்படுத்தப்படும். 2 வழித்தடங்கள் தவிர வருங்காலத்தில் 3 ரயில் வழித்தடங்களாக மாற்றப்படும். மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகள் வழியாக 3-வது வழித்தடம் அமையும். மதுரையில் இரு வழித்தடத்தில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் 32 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. பஸ் நிலையங்கள், விமான நிலையம், ரயில் நிலையங்கள் போன்ற 3 போக்குவரத்து சேவைகள் கொண்ட கட்டமைப்பு வரும் இடங்களில் ஒருங் கிணைந்த வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் சேவை செயல்படுத்தப்படும். இந்த 3 நிலையங்களுடன் மெட்ரோ ரெயில் நிலையங்களும் ஒருங்கிணைந்து இருக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையில் தனித்தனியாக இருந்தாலும், திட்டத்தை செயல்படுத்தும் போது ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் . சத்திரோடு சத்திரோட்டில் சாலையின் ஓரத்தில் வராமல், சாலையின் நடுவில் மெட்ரோ ரெயில் தூண்கள் அமைக்கப்படும். இதன் மூலம் வருங்காலத்திலர் அந்தசாலையை அகலப்படுத்த முடியும். மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் தானியங்கி மின் படிக்கட்டு தொழில் நுட்பம் மூலம் மக்கள் வரும் வகையில் அமைக்கப்படும். கோவையில் வழக்கமான மெட்ரோ ரெயில் திட்டம்தான் செயல்படுத்தப் பட உள்ளது. அடுத்த 40-50 ஆண்டுகளின் போக்குவரத்தை க கருத்தில் கொண்டு கோவையில் 3 மெட்ரோ கோச்சுகளில் சுமார் 700 பேர் பயணிக்கும் வகையில் மெட்ரோ ரெயில்களின் வடிவமைப்பு இருக்கும் . கோவையில் 2 வழித்தடங்களுக்கான டெப்போ நீலாம்பூரில் வருவதால் அவினாசி வழித்தடம் முதன்மை யாக தொடங்கப்படும் . பணிகளை விரைவாக முடிக்கவே ஆயுத்த பணிகளை தொடங்கி உள்ளோம்., மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் புதைவிட வழித்தடம் என்பதாலும், கோவையில் உயர்மட்ட வழித்தடம் என்பதால் மதுரையை விட கோவையில் இந்த பணிகள் முதலில் முடிவடைய வாய்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.