நீலகிரி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நடத்திய கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

நீலகிரி மாவட்டம், உதகை செவிலியர் பயிற்சி பள்ளியில், இந்து அறநிலையத்துறை மற்றும் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து இன்று (26-12-2024) நடத்திய திருக்கோயில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கடந்த 27-02-2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் 45,477 பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை (MASTER HEALTH CHECK UP)
செயல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருக்கோயில்களில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களுக்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து கட்டணமில்லா முழு உடற்பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டது, அதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த கட்டணமில்லா மருத்துவ பரிசோத னை முகாமில் 60 திருக்கோயில் பணியாளர்கள் பயன்பெற்றனர். இதில் (18 பெண்கள் மற்றும் 42 ஆண்கள்) பங்கு பெற்றவர்களுக்கு இ.சி.ஜி, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவுப் சிகிச்சை, சிறுநீரக பரிசோதனைகள், ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், காது, மூக்கு, தொண்டை, தோல் சிகிச்சை மற்றும் மகளிர் மருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு, அவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 1/2 இந்நிகழ்வில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி, உதகை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் மரு.ரவிசங்கர், உதகை வட்டாட்சியர் சங்கர்கணேஷ், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் ஜெகநாதன் (உதகை மாரியம்மன் கோயில்), வீரகுமார் (பொக்காபுரம் மாரியம்மன் கோயில்), ராஜேஸ் மணிகண்டன் (குன்னூர் விநாயகர் கோயில்) அறநிலைத்துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் முகாமில் கலந்து கொண்டனர்.