சூலூரில் பொங்கல் விழா பொங்கல் விழாவின் 31 ஆம் ஆண்டு விழா அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சி யில் சூலூரில் அனைத்து அமைப்பினரும் பங்கேற்ற ஒற்றுமை பேரணி, பறையாட்டம், கராத்தே, பளு தூக்குதல் , சிலம்பம், வீர விளையாட்டுக்கள், யோகாசனம், தென்றலாட நடன நிகழ்வு, குறு திரைப்படங்கள், மேடை நாடகம் ஆகியவை நடைபெற்றது. பொங்கல் விழா குழு தலைவர் த. மன்னவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர், முன்னாள் கோயமுத்தூர் மாவட்ட மேயர் முனைவர் செ.ம. வேலுச்சாமி கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்த வீரர்களுக்கும், தென்றலாட அரிமா சுந்தர்ராஜன், குறும்பட இயக்குனர்கள் சுரேஷ்குமார், இரட்டை பாதை சிவ பெருமாள், கவிஞர் கனகராஜ், சந்தன மூர்த்தி,ஜெய மாருதி தேகப் பயிற்சி சாலை ஆசிரியர் நேவி பாஸ்கரன், சிலம்பம் அகாடமி சிவகுமார்,யோகா நித்தியானந்தம், கல்ச்சுரல் அகாடமி அருண்குமார் கராத்தே ஜெபத்துரை ஆகியோருக்கும் அவரது குழுவினர்களுக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பேரூராட்சி தலைவர் தேவி, துணைத் தலைவர் கணேஷ் பொங்கல் விழா பொருளாளர் லோகநாதன், துணைச் செயலாளர் பழ.சிவகுமார், நிதி குழு தர்மராஜ், கார்த்தி அண்ணாமலை, பசுமை நிழல் பொறியாளர் விஜயகுமார், சுந்தர்ராஜ், வழக்கறிஞர் கந்தநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் வீராசாமி,ராமு உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் வெளிச்சம் சேகர் நன்றி தெரிவித்தார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0