கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் பாபு ஆகியோர் நேற்று இரவு தெலுங்குபாளையம் – வேடப்பட்டி ரோட்டில் உள்ள ராமச் சந்திரன் நகர் சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். விசார ணையில் அவர்கள் செல்வபுரம் கல்லாமேடு , தெற்குஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பிரகதீஸ் (வயது 24) வடக்கு ஹவுசிங்யூனிட்டையை சேர்ந்த நவுபல் ( வயது 22) சொக்கம் புதூர் கருப்பண்ணன் பாதையை சேர்ந்த மோகன் குமார் (வயது 20) சொக்கம்புதூர் இ.பி. காலனி வால்ட்டர் வில்லியம் (வயது 20) நித்தின் (வயது 19) என்பது தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். கார்த்திக் என்ற அம்மன் தாய் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார். இவர்களிடம்நடத்திய விசாரணையில் கொள்ளை அடிக்கும் நோக்கத்துடன் அந்த இடத்தில் பதுங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
