பால தண்டாயுதபாணி திருக்கோவிலில் தைப்பூச மண்டப அடிக்கல் நாட்டு விழா.

கோவை சுக்கிரவார்பேட்டையில் அருள்மிகு. பால தண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது.இந்து அறநிலையத்துறைகட்டுப்பாட்டுக்குள் உள்ள இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.பக்தர்களின் வசதிக்காகஉபயதாரர்களால் வழங்கப்பட்ட கோவிலை ஒட்டி உள்ள இடத்தில்தைப்பூச மண்டபம்கட்டுப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் அ.ரவி அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்,. விழாவுக்கு72 – வது வார்டு உறுப்பினர்மற்றும்திட்டக்குழு உறுப்பினர் கே.கார்த்திக் செல்வராஜ்தலைமை வகித்தார். விழாவில்,நகர அமைப்புக்குழு தலைவர் சந்தோஷ், முன்னாள் கவுன்சிலர் அம்சவனி செல்வராஜ், , ஆர்.பி கருணாகரன்.சிஆர் ரவிச்சந்திரன், தியாகு கோபிநாத்,வட்டச் செயலாளர் ஜெகதீசன்,துணைச் செயலாளர் நாசர்மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவை யொட்டி பக்தர்களுக்கு கோவில் அறங் காவலர் குழு தலைவர் பரமசிவன் சார்பில் சுவாமி படம் பொறித்த இலவச கடிகாரங் கள் வழங்கப்பட்டது.இதை வடக்கு மாவட்ட செயலாளர் ரவி,கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங் காவலர் குழு தலைவர் பரமசிவன்,நிர்வாகிகள் மகேஸ்வரன் ,ராஜா, விஜயலட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர்.