இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளின் அருகில் வாகன தணிக்கை செய்யப்படும் என்றும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், கடுமையாக எச்சரித்துள்ளார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0