காதலி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய காதலன் கைது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கணுவாய் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் விமல் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்தாராம். இவரது நடத்தை சரியில்லாததால் அந்த மாணவி அவரிடம் பழகுவதை தவிர்த்தார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் போலியாக 10 முதல் 15 கணக்குகள் வெவ்வேறு பெயர்களில் உருவாக்கி அந்த கணக்குகள் மூலம் அந்தகல்லூரி மாணவி பற்றி தவறாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, மாணவியின் மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தி வந்தார். இது குறித்து அந்த மாணவி கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விமல் குமாரை நேற்று கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.