தமிழக வியாபாரிகள் சம்மேளன பொருளாளராக ஐ.சிலுவை முத்துக்குமார் பொறுப்பேற்பு.

கோவை; தமிழக வியாபாரிகள் சம்மேளன மாதாந்திர செயற்குழு கூட்டம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு தலைமை தலைவர் எஸ். எம். பி .முருகன் தலைமைதாங்கினார். பொதுச் செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை நிர்வாகிகள் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சம்மேளனபுதிய பொருளாளராக ஐ.சிலுவை முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டார். புதிதாகபொறுப்பேற்றுள்ள சிலுவை முத்துக்குமாருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மே – 5 – ந் தேதி வியாபாரிகள் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது.