கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் ஏராளமான வீடுகள் உள்ளன .அங்கு ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிந்து வருகின்றன. இரவு நேரங்களில் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு உணவில் விஷம் கலந்து வைத்ததாக தெரிகிறது. இதனால் தெரு நாய்கள் அங்காங்கே செத்தும், மயங்கியும் கிடந்தன. இது தொடர்பாக விலங்குகள் நல வாரியத்தினருக்கு தகவல் கொடுக்கப் பட்டது.அவர்கள அந்த பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்கள். விலங்குகள்நல வாரியத்தின்சார்பில் இறந்து கிடந்த மற்றும் உயிருக்கு போராடிய நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி அங்கு அனுமதிக்கப்பட்ட தெரு நாய்கள் இறந்துவிட்டன. இறந்த நாய்களின் உடல்களை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில் விஷம் வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது .இது குறித்து கவுண்டம்பாளையம்விலங்குகள் நல வாரியத்தை சேர்ந்த கௌதம் ஸ்ரீவத்ஷன்கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் இது தொடர்பாக விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த யாசின் செய்யது , துரை, ராம்ராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0