கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருபவர் அம்மன் கே. அர்ச்சுனன்.இவரது வீடு செல்வபுரத்தில் உள்ளது.இவர் மீது வந்துள்ள லஞ்ச புகாரையொட்டி கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் செல்வபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை 6 – 30 மணிக்கு சோதனை தொடங்கியது. 3 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதே நேரத்தில் பெரியநாயக்கன்பாளையத்தில் அவரது மனைவியின் பெயரில் உள்ள தொழிற்சாலையிலும் இந்த சோதனை நடந்து வருகிறது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0