கோவை கலெக்டர் அலுவலகம் முன் நினைவுச்சின்னத்தில் சிறுமி சிலை உடைப்பு.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பழைய நுழைவு வாயில் எதிரே ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானா அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக உருண்டை அதன் அருகில் புத்தகங்கள் இப்போது போன்றும், அதில் சிறுமி இருப்பது போன்றும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த பகுதியில் ஒருவர் வந்தார். அவர் திடீரென்று அந்த நினைவு சின்னத்தில் உள்ள சிறிய அளவிலான சிறுமியின் சிலையை உடைத்து சேதப்படுத்தினார். இது பற்றி தகவல் அறிந்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் சிலையை உடைத்து சேதப்படுத்திய வரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்த பகுதியில் சுற்று திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை மன நல காப்பகத்தில் போலீசா சேர்த்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த இடத்தில் வேறு சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.