கோவையில் வீடு புகுந்து நகை – பணம் திருடிய கொள்ளையன் கைது

கோவை இருகூர் அருகே உள்ள ஏ .ஜி . புதூர் – குரும்பபாளையம் ரோட்டில் உள்ள பிரியா தோட்டத்தில் வசிப்பவர் நந்தகுமார் விவசாயி.நேற்று காலை 11-30 மணிக்கு இவர் தன் மனைவி ஜெயந்தியுடன் கொடுவாய்க்கு தக்காளி விதைகள் வாங்க சென்றிருந்தார்.மதியம் 2மணிக்கு வீடு திரும்பினார் அப் போது வீட்டின் முன் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்து 2 கொள்ளையர்கள் வெளியே வந்தனர் அவர்களை நந்தகுமார் பிடிக்க முயன்றார் அப்போது அந்த கொள்ளையர்கள் நந்தகுமாரை தாக்கி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து ஜெயந்தி சிங்காநல்லூர் போலீசில் புகார். சப் இன்ஸ்பெக்டர் கபில்ராஜ் வழக்கு பதிவு செய்து நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பக்கம் உள்ள பேட்டை, கோமதி நகரை சேர்ந்த கங்காதரன் மகன் திவ்ய கிருஷ்ணன் (வயது 17 )என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து 13 பவுன் நகைகள் 100 கிராம் வெள்ளி ரூ 50 ஆயிரம் பணம்பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச்அவரது நண்பர்கள் சேர்ந்த சூர்யா, , சுரேஷ், பாண்டி ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.