வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜார் பகுதியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் பாஜக அரசு கொண்டுவந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை கண்டித்து அதனை ரத்து செய்யக் கோரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆட்சி காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுவதாகவும் கண்டனத்தை தெரிவித்தனர் அதனைத் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து கண்டன முஹம்மது ஃபரூஸ் கோஷங்கள் எழுப்பினார்..இந்நிகழ்வில் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்கூரை வழங்கினர்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நடக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் மாவட்ட குழு சீனி முகம்மது தம்பி கீழக்கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் அப்பாஸ் அலி மன்பஈ தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ராஜ்குமார் நாலாவது வார்டு கவுன்சிலர் சூரியகலா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு ஷாம் விக்டர் நன்றியுரை வழங்கினார்.