கோவையில் 450 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் – வியாபாரி கைது..!

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை (குட்கா ) 4சக்கர வாகனத்தில் கடத்தி வருவதாக சிறுமுகை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தனிப்படை காவ‌ல்துறை‌யின‌ர் சம்பவம் இடமான போகலூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனை  நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த 4சக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதை மறைத்து வைத்திருந்த அன்னூர் பகுதியைச் சேர்ந்த காளிசாமி மகன் பிரசாந்த் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.