செல்போன் அடிக்க்ஷனில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் செல்போன் பழக்கத்திலிருந்து போதைப் பொருளில் அடிமையாகாமல் தடுக்கும் விதமாகவும் விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய இளைஞர்கள், கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கவும், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், சமூகத்துடன் இணைந்து செயல்படவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் புத்துணர்ச்சி பெறவும் இங்கு வழங்கப்படும் பயிற்சிகள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உடல் திறன், மனவலிமை ஏற்படும். மேலும், விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டு இம்மாவட்டத்திற்கும் நாட்டுக்கும் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வாகி வரவேண்டும், மேலும் எந்நேரமும் கைபேசிலேயே மூழ்கி கிடக்கும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபடவும் ஒரு நல்ல வாய்ப்பாக இது அமைகிறது எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும், எவ்வித கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. உடற்பயிற்சி ஆசிரியர்களை கொண்டு இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். ஒரு மாதம் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் இறுதியாக போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட இருக்கிறது