தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் சமூக நீதி போராளி கு. ராம கிருட்டினனின் 75வது பிறந்தநாள் பவள விழா

தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் சமூக நீதி போராளி கு. ராம கிருட்டினன் அவர்களின். 75வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் கோவை ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் கோவை நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் பெரும் புலவர் சிந்தனை நா. கௌதமன் கவிஞர் இரா. வெங்கடேசன் அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் கோவை சி.எம். ஸ்டீபன் ராஜ் மற்றும் கவிஞர் மூடாரம். மணிகண்டன் ஆகியோர் இணைந்து 75 ஆவது பிறந்த நாளை குறிக்கும் வகையில் விலை மதிப்பில்லா 75 புத்தகங்கள் கொண்ட நூல் மாலையை திரு கு. ராம கிருட்டினன் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.