கோவை.மே 6 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடை பகுதியில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் பாபு.இவரது மகன் பிரதாப் ( வயது 21) நேற்று இவர் பைக்கில் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் ராகவன் (வயது 17) என்பவருடன் தேக்கம்பட்டி – கணுவாய் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதாப் இறந்தார். ராகவன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார், விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவாக சென்ற காரை தேடி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0