கோவை மே 8 இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.97 % சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம் 4 வது இடத்தை பிடித்து உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 – ந் தேதி தொடங்கி 25 – ந் தேதி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உள்பட 363 பள்ளிகளை சேர்ந்த 16,135 மாணவர்கள், 18, 902 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 037 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வினை எழுதினர்.இதன் இடையே தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 16,135 மாணவர்களில் 15,579 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.தேர்வு எழுதிய 18,902 மாணவிகள் 18,576 தேர்ச்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் மொத்தமாக 34,155 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 96.55 % சதவீதமும், மாணவிகள் தேர்ச்சி விகிதம் 98.28% என மொத்தமாக 96.97% சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் கோவை மாவட்டம் நான்காவது இடத்தை பிடித்தது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0