பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

கோவை மே 10 கோவை போத்தனூர், சாரதா மில் ரோட்டை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் விக்னேஸ்வரன் ( வயது 23 ) இவர் அங்குள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று தனது நண்பர் காளீஸ்வரனுடன் நஞ்சுண்டபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 270 ரூபாயை பறித்தார். அவரை விக்னேஸ்வரன்அங்கு நின்ற பொதுமக்கள் உதவியுடன் கையும் களமாக பிடித்து போத்தனூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.விசாரணையில் அவர் போத்தனூர், சர்தார் சாகிப் வீதியைச் சேர்ந்த நிஜாமுதீன் ( வயது 33) என்பது தெரிய வந்தது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.