ரேஸ்கோர்சில் விஷம் குடித்து நகை வியாபாரி தற்கொலை .

கோவை மே 10 கோவை ராஜவீதியை சேர்ந்தவர் தீஜாராம் சவுத்ரி (வயது 52) இவர் ராஜ வீதியில் நகைக்கடை நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த தீஜாராம் ரேஸ்கோர்சில் உள்ள நடைபாதையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார். தொழில் நஷ்டம் காரணமாக எலி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து அவரது மகன் ஜெயப்பிரகாஷ் சவுத்ரி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.