கோவை மே 12 கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்த வாலிபர்கள் சட்ட விரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக மாநகர போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர் இதில் துடியலூர், குருடம் பாளையம் பக்கம் உள்ள தொப்பம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானவர் வேலை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் வங்காளதேசச் சேர்ந்த 2 பேர் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் தங்கி இருப்பது தெரியவந்தது .உடனே போலீசார் அந்த 2பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வங்காளதேசம் மைமான்சிங் மாவட்டம், திரிசால் பகுதியைச் சேர்ந்த லோதிப் அலி (வயது 29 )சொரீப் ( வயது35)என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த 2 பேரையும் துடியலூர் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனர் .பின்னர் அவர்கள் ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சொரீப் 3 ஆண்டுகளும், லோதிப் அலி ஒரு ஆண்டாக எந்தவித ஆவணங்களும் இன்றி சட்ட விரோதமாக தங்கி வேலை செய்து வந்தது தெரிய வந்தது .உடனே அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர் . விசாரணையில் கைதான 2 பேரும் வங்காள தேசத்தில் இருந்து சட்டவிரோதமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு வந்துள்ளனர் .பின்னர் அவர்கள் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து கோவைக்கு வந்து தொப்பம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தின் தங்கி வேலை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்..மேலும் யாராவது சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்..

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0