தொழில் அதிபரிடம் 25 லட்சம் மோசடி. கணவன் -மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு.

கோவை. மே.12-கோவை, குனியமுத்தூர் ,பி.கே. புதூர், ஸ்ரீநகர் காலனி சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 43). இவர் கோவை புதூர் , இ.பி .காலணியில் ஷூக்கடை நடத்தி வருகிறார்.இவரிடம் பொள்ளாச்சியைச் சேர்ந்த பிஜூ அலெக்ஸ் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறிய அறிமுகமாகியுள்ளார். அப்போது, விக்னேஷிடம் , பிஜூஅலெக்ஸ், ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறியுள்ளார்.இதனால் விக்னேஷ் அவரிடம் ரூ.25 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் பிஜூ அலெக்ஸ் அவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த விக்னேஷ் பிஜி அலெக்ஸ் மற்றும் அவரது மனைவி சுகன்யா , தாயார் மார்க்ரேட் ஆகியோர் மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தங்கம் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.