வெவ்வேறு விபத்தில் வாலிபர்-முதியவர் சாவு.

கோவை. மே.12-திருப்பூர் மாவட்டம், உடுமலை, போடிப்பட்டி, தம்பி நகரை சேர்ந்தவர், ராம் முருகன். இவரது மகன் ஹர்ஷத் ( வயது 20). இவர் நேற்று மதியம் ஹர்ஷத் அவரது நண்பர் சபரி கிரிவாசன் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கோவை-அவிநாசி ரோட்டில் சென்றார். மோட்டார் சைக்கிளை சபரி கிரிவாசன் ஓட்டிச் சென்றார்.பீளமேடு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது முன்னால்சென்ற ஆட்டோவை சபரி கிரிவாசன் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக ஹர்ஷத் இறந்தார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அதேபோன்று கோவை துடியலூர் , ராக்கிபாளையம் ,ஏ .கே .எஸ். நகரை சேர்ந்த ஆறுமுகம் ( வயது 75) இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். தொப்பம்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள பேக்கரி அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி ஆறுமுகம் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்துஅதே இடத்தில் இறந்தார்.இது கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா லாரி டிரைவர் பீகாரைச் சேர்ந்த லால் பாபு மண்டல் (வயது 26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.