இளையராஜா இன்னிசைக் கச்சேரி ஒத்திவைப்பு.

கோவை மே 12 கோவை அருகே உள்ள கோவைபுதூரில் வருகிற 17-ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இசை நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.