கோவை சூலூரில் பழைமை வாய்ந்த தையல்நாயகி வைத்தீஸ்வரன் ஆலயத்தில் மண்டல பூஜை

கோயமுத்தூர் மாவட்டம் சூலூரில் பழைமை வாய்ந்த தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.அதிமுக பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, திருக்கோவில் திருப்பணிக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சர் முனைவர் செ.ம. வேலுச்சாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி ஆகியோர் ஏற்பாட்டில் திருக்கோவில் மண்டல பூஜையை ஏற்று கலச வேள்வி வழிபாட்டுடன் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீப ஆராதனை நடைபெற்று வருகை தந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தோப்புஅசோகன், முன்னாள் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சாந்திமதி, வழக்கறிஞர் பிரபுராம், அதிமுக சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி. பி கந்தவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், சூலூர் நகர கழக செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகை வேலன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய,நகரக் கழக நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான அதிமுகவினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு திருக்கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.