இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதியாகும் வரை தற்காலிகமாக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.இதைத்தொடர்ந்து குற்றச்சாட்டு உறுதியானால் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் மார்ட்டின் கானெல் என்பவர் பொறுப்பேற்பார் என்றும் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0