ரயிலில் படுக்கை கழன்று விழுந்து தூங்கிக் கொண்டிருந்த பயணி படுகாயம். 

கோவை மே 14 சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முதல் இருக்கையில் ஒரு பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் இரண்டாவது படுக்கையில் பயணம் செய்த ஒருவர் பாத்ரூம் செல்வதற்காக கீழே இறங்கினார்.அப்போது அந்த இருக்கையின் சங்கிலி கழண்டு படுக்கை விழுந்தது. இதனால் முதல் படுக்கையில் படுத்திருந்த பெண்னின் தலையில் வேகமாக பட்டது.இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.ரத்த காயத்துடன் அந்த பெண் சேலம் வரை பயணம் செய்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.தலையில் ரத்தம் கொட்டிய நிலையில் அந்த பெண் பயணி 2 மணி நேரம் ரயிலில் பயணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.