கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது ரிஸ்வந்த்- தந்தை பெயர் முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.அறுவை சிகிச்சைக்கு பின்னர் உடலியல் மற்றும் மறுவாழ்வு மருத்துவ சிகிச்சை பிரிவில் உள் நோயாளியாக அனுமதித்து செயற்கை உடல் அவயங்கள் தயாரிக்கும் நிலையத்தில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுவனுக்கு செயற்கை கால் நேர்த்தியான முறைப்படி அளவெடுத்து, செய்யப்பட்டு, பொருத்தப்பட்டு, நடை பயிற்சி கொடுக்கப்பட்டு தற்பொழுது தன்னிச்சையாக செயல்படவும், நடக்கவும் , தன்னம்பிக்கை ஏற்படும் அளவிற்கு சிகிச்சைகள் உலக தரம் அளவில் கொடுக்கப்பட்டுள்ளன.கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த செயற்கை மூட்டுத் தொகுப்பின் கீழ் இதுவரை பயனடைந்தவர்களில் ரிஷ்வந்த் இளைய பயனாளி ஆவார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0