கோவை மாவட்டத்தில் தீவிர கஞ்சா வேட்டை. ஒரே நாளில் 12பேர் கைது.

கோவை ஜூன் 16 கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா,போன்ற போதைப் பொருள்களை அடியோடு ஒழிப்பதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் தீவிர கவனம்செலுத்தி வருகிறார்.இந்த நிலையில் மாவட்ட முழுவதும் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்றதாக அதே பகுதியைசேர்ந்த வெள்ளியங்கிரி ( வயது 28) ( வயது 34)காளிமுத்து (வயது 22)காந்தி ( வயது 42) சம்பத்குமார் (வயது 34 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சூலூர் வெங்கிட்டாபுரம், பஸ் ஸ்டாப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குமார் (வயது 22)கைது செய்யப்பட்டார். கருமத்தம்பட்டி சோமனூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்ற பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் ( வயது 21) கோவை சவுரிபாளையம் பாளையம் ,நேதாஜி வீதி கோகுல் கிருஷ்ணன் (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..சோமனூர் லாரி பேட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக தென் சங்கம்பாளையம் மேகநாதன் ( வயது 201 பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் வீதி சக்தி நிவாஸ் (வயது 18) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேட்டுப்பாளையம் எல்லப்பாளையம் பிரிவில் நடந்த சோதனையில் கஞ்சா விற்ற அன்னூர் எல்லப்பபாளையம் ரூபைகயான் (வயது 26)பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் சிங் வயது 27 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் சோதனை நடந்து வருகிறது.